Current Affairs – 06 January, 2022

நடப்பு நிகழ்வுகள், ஜனவரி 06 – 2022

CURRENT AFFAIRS JANUARY 06 – 2022

1. தூய்மை கங்கைக்கான தேசிய இயக்கத்தின் (NMCG) புதிய இயக்குநர் ஜெனரலாக நியமிக்கபட்டுள்ளவர் யார்?

 1. ராஜீவ் ரஞ்சன் மிஸ்ரா
 2. அசோக் குமார்
 3. ராஜிவ் குமார் 
 4. அலோக் ஷர்மா 

Answer: 2

 • ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் கூடுதல் செயலாளர், ஜி அசோக் குமார் ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் தூய்மை கங்கைக்கான தேசிய இயக்கத்தின் (NMCG) புதிய இயக்குநர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார். 
 • அசோக் குமார் இந்தியாவின் மழை மனிதர்’ என்று பிரபலமாக அறியப்படுகிறார்.

Who has been appointed as the new Director General of the National Movement for Purity Ganges (NMCG)?

 1. Rajiv Ranjan Misra
 2. Ashok Kumar
 3. Rajiv Kumar
 4. Alok Sharma

Answer: 2

 • G Ashok Kumar, Additional Secretary, Ministry of Jal Shakti, has been appointed as the new Director General of the National Movement for Purity Ganges (NMCG) under the Ministry of Jal Shakti.
 • Ashok Kumar is popularly known as the ‘Rain Man of India’.

2. இந்தியாவின் முதல் புகை இல்லாத மாநிலமாக உருவாகியுள்ள மாநிலம் எது 

 1. இமாச்சலப் பிரதேசம்
 2. மத்திய  பிரதேசம்
 3. குஜராத் 
 4. தமிழ்நாடு 

Answer: 1

 • இமாச்சலப் பிரதேசம் முதல் 100 % எல்பிஜி செயல்படுத்தும், மேலும் புகை இல்லாத மாநிலம் என சாதனை படைத்துள்ளது . உஜ்வாலா திட்டம் மற்றும் கிரஹினி சுவிதா யோஜனா ஆகியவற்றின் காரணமாக இந்த மைல்கல் எட்டப்பட்டது. 
 • முக்ய மந்திரி க்ரிஹினி சுவிதா யோஜனா 26 மே 2018 அன்று தொடங்கப்பட்டது.
 • உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் ரூ. இமாச்சலப் பிரதேசத்தில் 21.81 கோடியே 1.36 லட்சம் இலவச வீட்டு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன

Which is the first smoke Free State in India?

 1. Himachal Pradesh
 2. Madhya Pradesh
 3. Gujarat
 4. Tamil Nadu

Answer: 1

 • Himachal Pradesh is the first state to implement 100% LPG and is smoke free. This milestone was achieved due to the Ujwala project and the Grahini Suvidha Yojana.
 • Chief Minister Grihini Suvidha Yojana was launched on 26 May 2018.
 • Under the Ujwala Yojana, Rs. 21.81 crore 1.36 lakh free housing connections have been provided in Himachal Pradesh.

3. உலக போர் அனாதைகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது

 1. ஜனவரி 4
 2. ஜனவரி 5
 3. ஜனவரி 6
 4. ஜனவரி 7

Answer: 3

 • போர் மோதல்களால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் அவல நிலை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த ஜனவரி 6ஆம் தேதி உலக போர் அனாதைகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.
 • போர் அனாதைகளின் உலக தினம் பிரெஞ்சு அமைப்பான SOS Enfants en Detresses ஆல் தொடங்கப்பட்டது, 
 • இது மோதலில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டது.

World War Orphans Day is observed on any day of each year

 1. January 4
 2. January 5
 3. January 6
 4. January 7

Answer: 3

 • World War Orphans Day is observed on January 6 to raise awareness about the plight of children who have lost their parents due to the conflict.
 • World Day of War Orphans Launched by the French organization SOS Enfants en Detresses,
 • It aims to help children affected by conflict.

4. ஒடிசா மாநிலத்தின் எந்த மாவட்டம் முதல் குழந்தை திருமணம் இல்லாத மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது 

 1. புவனேஷ்வர் 
 2. கஞ்சம்
 3. கல்கண்டி 
 4. கட்டாக் 

Answer: 2

 • ஒடிசாவின் கஞ்சம் மாநிலத்தின் முதல் குழந்தை திருமணம் இல்லாத மாவட்டமாக அறிவிக்கப்பட்டு உள்ளது . 
 • கஞ்சம் நிர்பயா கதி  என்ற திட்டத்தின் மூலமாக இது சாத்தியமாகி உள்ளது 
 • ஒடிசா தலைநகர்: புவனேஸ்வர்
 • ஒடிசா கவர்னர்: கணேஷி லால்
 • ஒடிசா முதல்வர்: நவீன் பட்நாயக் 

No district in the state of Orissa has been declared the first child marriage free district

 1. Bhubaneswar
 2. Kancham
 3. Kangandi
 4. Cuttack

Answer: 2

 • Odisha has been declared the first child marriage free district in the state.
 • This has been made possible through a project called Kancham Nirbhaya Kathi
 • Capital of Odisha: Bhubaneswar
 • Governor of Odisha: Ganesh Lal
 • Odisha Chief Minister: Naveen Patnaik

5. தமிழகத்தின் பொருளாதாரம் ஒரு லட்சம் கோடி டாலர் என்ற இலக்கை எட்டுவதற்காக எந்த ஆண்டு வரை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது 

 1. 2025
 2. 2030
 3. 2035
 4. 2040

Answer: 2

 • தமிழகத்தின் பொருளாதாரம் ஒரு லட்சம் கோடி டாலர் பொருளாதாரத்துக்காக விரிவான செயல் திட்டம்
 • 2030-ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தின் பொருளாதாரம் ஒரு லட்சம் கோடி டாலர் என்ற இலக்கை எய்த வேண்டும் 
 • புதிய ஒற்றைச் சாளர இணைய முகப்பையும், அதை எளிதாகச் செயல்படுத்துவதற்கு அலைபேசி செயலி ஒன்றையும் முதல்வர் அறிமுகப்படுத்தியுள்ளார்.

The economy of Tamil Nadu is targeted to reach the target of one trillion dollars by which year

 1. 2025
 2. 2030
 3. 2035
 4. 2040

Answer: 2

 • The Economy of Tamil Nadu is a comprehensive action plan for a trillion dollar economy
 • The economy of Tamil Nadu should reach the target of one trillion dollars by 2030
 • CM has introduced a new single window web interface and a mobile processor to make it easier to implement.

6. சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் முதலிடத்தில் உள்ள மாநிலம் எது 

 1. கேரளா 
 2. ஆந்திர பிரதேசம் 
 3. தெலுங்கானா 
 4. ஹிமாச்சல் பிரதேசம் 

Answer: 2

 • அதிகமான சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்திய மாநிலங்களில் நாட்டிலேயே ஆந்திர பிரதேசம் முதலிடம் வகிக்கிறது.
 • 15-18 வயதுக்குள்பட்ட சிறார்களுக்கு கரோனா முதல் தவணை தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்பட்டது. 
 • இதில், இதுவரை ஆந்திரம் அதிகபட்ச மாக 39.8 சதவீதம் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தி முதலிடம் வகிக்கிறது. 
 • ஹிமாசல பிரதேசம் 37 சதவீதமும், 
 • குஜராத் 30.9 சதவீதமும் தடுப்பூசி செலுத்தி அடுத்ததடுத்த இரண்டு இடங்களைப் பிடித்துள்ளன.
 • சிறார்களுக்கு கோவேக்ஸின் தடுப்பூசி மட்டும் செலுத்தப்படுகிறது. 

Which state is number one in vaccinating minors?

 1. Kerala
 2. Andhra Pradesh
 3. Telungana
 4. Himachal Pradesh

Answer: 2

 • Andhra Pradesh is the first state in the country to have vaccinated more children.
 • The Corona first-installment vaccination program for children aged 15-18 years has been launched.
 • Of these, Andhra Pradesh tops the list with a maximum of 39.8 per cent vaccination of minors so far.
 • Himachal Pradesh is 37 percent,
 • Gujarat is next with 30.9 per cent vaccination.
 • Only covax vaccine is given to minors.

7. தென் துருவத்துக்குச் சென்று வந்துள்ள பிரிட்டனைச் சேர்ந்த இந்திய வம்சாவளி யார் 

 1. ஹர்பிரீத் சாண்டி
 2. வைஷாலி க்ரிஷ் 
 3. ஷாமிலி குமார் 
 4. அஞ்சலி ராமன் 

Answer: 1

 • தென் துருவத்துக்குச் சென்று வந்துள்ள பிரிட்டனைச் சேர்ந்த இந்திய வம்சாவளி  – ஹர்பிரீத் சாண்டி (32), 
 • அந்தப் பகுதிக்கு தனியாகச் சென்ற வெள்ளை இனத்தைச் சேராத முதல் பெண் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
 • ஹர்பிரீத் சாண்டி, பிரிட்டன் மருத்துவப் படைப் பிரிவில் பயிற்சி அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார்.

Who is of British descent who has been to the South Pole?

 1. Harpreet Sandy
 2. Vaishali Krish
 3. Shamili Kumar
 4. Anjali Raman

Answer: 1

 • Harpreet Sandy (32), of British Indian descent to the South Pole
 • She holds the record for being the first non-white woman to visit the area alone.
 • Harpreet Sandy serves as a training officer in the British Medical Force.

8. மேஜர் தியான் சந்த் விளையாட்டுத்துறை பல்கலைக் கழகத்திற்குப் பிரதமர் மோடி எங்கு அடிக்கல் நாட்டினார் 

 1. லக்னோ 
 2. போபால் 
 3. மீரட் 
 4. புனே 

Answer: 3

 • உத்திரபிரதேசம் – மீரட் நகரில் நிறுவப்பட உள்ள மேஜர் தியான் சந்த் விளையாட்டுத்துறை பல்கலைக் கழகத்திற்குப் பிரதமர் மோடி அவர்கள் அடிக்கல் நாட்டினார்.
 • மீரட் பகுதியிலுள்ள சார்தானா நகரின் சலாவா மற்றும் கைலி கிராமங்களில் நிறுவப்பட உள்ளது.
 • இந்தப் பல்கலைக்கழகமானது 540 மகளிர் மற்றும் 540 ஆடவர் உட்பட மொத்தம் 1080 விளையாட்டு வீரர்களுக்குப் பயிற்சியளிக்கும் அளவில் போதிய இட வசதியைப் பெற்றிருக்கும்.

Where Prime Minister Modi laid the foundation stone for the Major Tian Chand Sports University

 1. Lucknow
 2. Bhopal
 3. Meerut
 4. Pune

Answer: 3

 • Uttar Pradesh: Prime Minister Narendra Modi has laid the foundation stone for the Major Tian Chand Sports University to be set up in Meerut.
 • It is to be set up in the villages of Salawa and Kylie in the city of Sardana in the Meerut region.
 • The university will have enough space to train a total of 1080 athletes, including 540 women and 540 men.

9. பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சகத்தினால் ஆற்றல் மாற்ற ஆலோசனைக் குழு  யாருடைய தலைமையில் அமைக்கப்பட்டது 

 1. அமீர் க்ரிஷ் 
 2. தருண் கபூர் 
 3. வருண் கிருஷ்ணன் 
 4. அர்ஜுன் சிங் 

Answer: 2

 • ஆற்றல் மாற்ற ஆலோசனைக் குழு பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சகத்தினால் உருவாக்கப்பட்டது. பெட்ரோலிய அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர் தருண் கபூர் இதற்குத் தலைமை தாங்குகிறார்.
 • பின்வரும் பணிகளுக்காக உருவாக்கப்பட்டது. 
 • 2070ஆம் ஆண்டிற்குள் நிகரச் 0 உமிழ்வு என்ற இந்தியாவின் இலக்கை அடைய உதவுகள்

An Energy Change Advisory Committee chaired by the Ministry of Petroleum and Natural Gas

 1. Amir Krish
 2. Tarun Kapoor
 3. Varun Krishnan
 4. Arjun Singh

Answer: 2

 • The Energy Change Advisory Committee was set up by the Ministry of Petroleum and Natural Gas. It is headed by former Petroleum Ministry secretary Tarun Kapoor.
 • Created for the following tasks.
 • Aid to achieve India’s goal of Net Emissions by 2070

10. இந்தியாவின் முதல் காகிதம் இல்லாத நீதிமன்றமாக எந்த நீதிமன்றம் மாறயுள்ளது 

 1. குஜராத் 
 2. கேரளா 
 3. பஞ்சாப் 
 4. ஆந்திரப்பிரதேசம் 

Answer: 2

 • இந்தியாவின் முதல் காகிதம் இல்லாத நீதிமன்றமாக  கேரள உயர் நீதிமன்றம் மாற உள்ளது. 
 • உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஸ்மார்ட் நீதிமன்ற அறைகளை 1 ஜனவரி 2022 அன்று திறந்து வைத்தார். 

Which court has become India’s first paperless court?

 1. Gujarat
 2. Kerala
 3. Punjab
 4. Andhra Pradesh

Answer: 2

 • The Kerala High Court is set to become India’s first paperless court.
 • Supreme Court Judge DY Chandrasooty inaugurated the Smart Court Rooms on 1 January 2022.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *