
தேசிய செய்திகள்
1. உச்சநீதிமன்றம் :
- இந்தியாவில் உள்ள உச்ச நீதிமன்றத்தில் நாட்டில் முதல் முறையாக 34 நீதிபதிகளில் 4 பெண் நீதிபதிகள் செயல்படுகின்றனர் .
- இந்தியாவில் உள்ள உயர் நீதிமன்றங்களின் 1098 நீதிபதிகளில் 83 பெண் நீதிபதிகள் செயல்படுகின்றன என சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்
உங்களுக்கு தெரியுமா
- உச்சநீதிமன்றம் -ஷரத்து 124-146
- தலைமை நீதிபதி மற்றும் நீதிபதிகளை நியமிப்பவர் குடியரசு தலைவர்
2. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் :
- மத்திய அறிவியல் மற்றும் தொழிநுட்ப துறை இணை அமைச்சர் கூறுகையில் :
- ஆகஸ்ட் மாதம் சந்திராயன் -3 விண்ணில் ஏவப்படவுள்ளது.
- ஜனவரி முதல் டிசம்பர் மாததிற்குள் 8 ஏவுகணை மற்றும் 7 விண்கலபயணத்திட்டங்கள் செயல்படுத்தயுள்ளன
3. மத்திய அரசு :
- விபத்தில் சிக்குப்பவர்களை காப்பாற்றுபவர்களுக்கு 5000 பரிசு என அறிவித்துள்ளது
4. பெய்ஜிங் விளையாட்டுகளை இந்திய தூதரக அதிகாரிகள் புறக்கணிக்க உள்ளனர்.
- ஒலிம்பிக் விளையாட்டு விழாவை இந்தியா தூதரக அதிகாரிகள் புறக்கணிப்பதாக முதல் முறை அறிவித்தது
5. பிப்ரவரி 4 - இலங்கையின் தேசிய தினம்
- ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 4 ஆம் நாள் இலங்கையின் தேசிய தினம் சுதந்திர தினமாக கொண்டாடப்படுகிறது. 1948 ஆம் ஆண்டு பிப்ரவரி 4 ஆம் நாள் இலங்கை பிரித்தானிய ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றது.
தமிழ்நாடு
1.சத்தியமங்கலம் புலிகள் காப்பகதிற்கு டிஎக்ஸ் விருது:
- சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் என 2013 அறிவிக்கபட்டது.
- கடந்த 8 வருடங்களில் 30 லிருந்து 80 புலிகளாக மாற்றியுள்ளனர்.
2. தமிழ்நாடு தரவரிசை:
- 2019-2020 ஆம் ஆண்டில் தமிழ்நாடு ஒரு ஹெக்டேருக்கு 76 டன் அரிசியை எட்டியுள்ளதாக ரிசர்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது.
- 2011-12 முதல் 2019-2020 வரை மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் தமிழகத்தின் தரவரிசை 2-வது இடத்தில் இருந்தது.
- நல்லாட்சி குறியீடு 2020-2021 இன் படி, நீதித்துறை மற்றும் பொதுப் பாதுகாப்பு தொடர்பான “குரூப் ஏ” மாநிலங்களில் தமிழ்நாடு முதல் இடத்தைப் பிடித்தது.
- தமிழகம் சுற்றுச்சூழலில் இரண்டாவது இடத்திலும், விவசாயத்தில் நான்காவது இடத்திலும் உள்ளது
- நிதி ஆயோக்கின் பல பரிமாண வறுமைக் குறியீட்டைப் பயன்படுத்தி, கிராமப்புற-நகர்ப்புற வேறுபாட்டின் அடிப்படையில் தமிழ்நாடு நடுத்தர நிலையில் உள்ளது.
இன்று ஒரு தகவல்
காந்தி இந்தியா வருகை :
- காந்தி தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு ஜனவரி 09,1915ம் ஆண்டு வந்தார் .
- ஜனவரி 09 வெளிநாடு வாழ் இந்தியர் தினமாக அனுசரிக்கப்படுகிறது .
- இறந்த தினம் :30 ஜனவரி 1948
- ஜனவரி 30 தியாகிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது .
Post Views:
35